பிரித்தானியாவில் 2027 முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய விதிகள்; என்ன தெரியுமா?

2027-இல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், அதன் தாக்கம் உலகளாவிய கிரிப்டோ சந்தை முழுவதும் உணரப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் 2027 முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய விதிகள்; என்ன தெரியுமா?

பிரித்தானிய அரசு, கிரிப்டோகரன்சி சந்தையை முறைப்படுத்தும் நோக்கில் புதிய சட்டத் திட்டங்களை முன்வைத்துள்ளது. இந்த சட்டங்கள் 2027-ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரவிருக்கின்றன.

இதன்படி, கிரிப்டோ நிறுவனங்கள் பாரம்பரிய நிதி நிறுவனங்களைப் போலவே Financial Conduct Authority (FCA) எனும் ஒழுங்குமுறை அமைப்பின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், “டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் சொத்துகள் நுகர்வோருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காக அவற்றை 'regulatory perimeter' எனப்படும் சட்டப்பூர்வ ஒழுங்குமுறை எல்லைக்குள் கொண்டு வருவது அவசியம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாற்றம் கிரிப்டோ சந்தையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, முதலீட்டாளர்களை மோசடிகள், தவறான வாக்குறுதிகள் மற்றும் பாதுகாப்பற்ற பரிமாற்றங்களிலிருந்து பாதுகாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பின் படி, கிரிப்டோ நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தை நிறுவனங்கள் பின்பற்றும் தரநிலைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியிருக்கும். இது கிரிப்டோ சந்தையை “சட்டப்பூர்வ நிதி சந்தை” என அங்கீகரிக்கும் முக்கிய அடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் கிரிப்டோ சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், சந்தையின் நீண்டகால நிலைத்தன்மையையும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

2027-இல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், அதன் தாக்கம் உலகளாவிய கிரிப்டோ சந்தை முழுவதும் உணரப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.