முதலிரவில் அடம்பிடித்த பெண் - மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட ஷாக்! நடந்தது என்ன?
ஆக்ரா நகரில் புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியிடையே முதலிரவிலேயே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. திருமண நிகழ்வுகள் அனைத்தும் சீராக முடிந்த நிலையில், மணமகளை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து வந்தபின் இந்த பிரச்சனை உருவானதாக கூறப்படுகிறது.
மணமகன் மற்றும் மணமகள் இருவரும் அறைக்குள் சென்றபோது, மணமகள் எதிர்பாராத விதமாக பெரிய தொகை பணம் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாம்பத்ய உறவை தொடங்குவதற்கு முன் ரூ.90 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறியதாகவும், இல்லையெனில் உறவை ஏற்கமாட்டேன் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த கோரிக்கையால் அதிர்ச்சியடைந்த மணமகன், அதை நிராகரித்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் இரு குடும்பங்களுக்கும் பரவி, மோதலாக மாறியது. மணமகள் தனது குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தகராறு தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.
மணமகன் தரப்பின் குற்றச்சாட்டுப்படி, மணமகள் குடும்பத்தினர் வீட்டில் சேதப்படுத்தியதுடன், எரிவாயு குழாயை சேதப்படுத்தி தீவிபத்து ஏற்படுத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீட்டுக்குள் இருந்தவர்களை பூட்டிவிட்டு, அபாயகரமான சூழ்நிலை உருவாக்கியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அப்பகுதி மக்களின் உதவியுடன் குடும்பத்தினர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மணமகள் திருமணத்தில் விருப்பமின்றி பணத்திற்காக சம்மதித்ததாக ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் முழுமையான விசாரணை நடத்தி வருவதுடன், இதில் வேறு பின்னணி காரணங்கள் உள்ளனவா என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.