ஆண்களே! உங்கள் விந்துவைக் கெட்டிப்படுத்தணுமா? டாக்டர் சொல்லும் 5 உணவுகள் இதோ!

தற்போது ஆண்களிடையே அதிகரித்துவரும் கருவுறாமைப் பிரச்சனைக்கு மோசமான உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறையுமே காரணம். விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை மற்றும் நீந்தும் திறன் குறைவதால் பல ஆண்கள் தந்தையாக சிரமப்படுகின்றனர்.


ஆண்களே! உங்கள் விந்துவைக் கெட்டிப்படுத்தணுமா? டாக்டர் சொல்லும் 5 உணவுகள் இதோ!

தற்போது ஆண்களிடையே அதிகரித்துவரும் கருவுறாமைப் பிரச்சனைக்கு மோசமான உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறையுமே காரணம். விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை மற்றும் நீந்தும் திறன் குறைவதால் பல ஆண்கள் தந்தையாக சிரமப்படுகின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் விந்துவைக் கெட்டிப்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என டாக்டர் பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்த ஐந்து முக்கிய உணவுகள்: முட்டை, கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் கொள்ளு, வேர்க்கடலை மற்றும் பலாப்பழ விதை, வாழைப்பழம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த மீன்கள். இவற்றுடன் மது, புகை பழக்கத்தை கைவிடுதலும், சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுதலும் அவசியம்.

தற்போது ஆண்களிடையே கருவுறாமை பிரச்சனை அதிகரித்து வருவதோடு, பொதுவானதாகிவிட்டது. இப்படியான நிலை ஏற்பட காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், மோசமான உணவுப் பழக்கங்களும்தான். பொதுவாக திருமணமான தம்பதிகள் அனைவருமே தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், குடும்பத்தை விரிவுபடுத்தவும் பெற்றோராவதற்கு விரும்புகின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில ஆண்கள் தந்தையாக மாற சிரமப்படுகின்றனர். இதற்கு அவர்களின் விந்தணுக்களின் தரமும், ஆரோக்கியமும், எண்ணிக்கையும் குறைவாக இருப்பதும்தான். இதன் விளைவாக தனது துணையை கருத்தரித்த வைக்க முடியாமல் சவால்களை சந்திக்க நேரிடுகிறது.

முன்பெல்லாம் ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியாமல் போனால் அதற்கு பெண்கள்தான் காரணம் என்று பலரும் கருதுவார்கள். ஆனால் கருத்தரிக்க முடியாமல் போக பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஆண்கள் சந்திக்கும் கருவுறாமை பிரச்சனைக்கு, அதிர்ஷ்டவசமாக உணவுகளின் மூலம் சரிசெய்ய முடியும் என்பது தெரியுமா? ஆம், ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும், நீந்தும் திறனையும், ஆரோக்கியத்தையும், எண்ணிக்கையையும் ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் பலரும் கூறுகின்றனர்.

டாக்டர் பிள்ளை அவர்களும் தனது இன்ஸ்டா பக்கத்தில் விந்துவைக் கெட்டியாக்கி, அதன் ஆரோக்கியத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவும் 5 சூப்பர் உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: "பொதுவாக வெயிலில் அதிகமாக வேலை செய்வது, நிறைய நேரம் மிஷின்களில் வேலை செய்வது, அதிகப்படியான மன அழுத்தம் போன்றவை உடலின் சூட்டை அதிகரித்து விந்தணுக்களை பாதிக்கிறது. விந்தணுக்கள் அதன் தரம், நீந்தும் திறன், அதன் அளவு, அமைப்பு போன்ற அனைத்திலும் சரியாக இருந்தால் மட்டும்தான் கருத்தரிக்க முடியும். விந்தணுக்களின் தன்மையானது எந்த அளவு கெட்டியாக உள்ளதோ, அந்த அளவு நன்றாக உள்ளது என்று அர்த்தம். எந்த அளவு நீர்த்துப் போகிறதோ, அந்த அளவு தரம் குறைந்துள்ளது என்று அர்த்தம்" என்று கூறினார். அதுமட்டுமின்றி, 5 உணவுகளையும் பகிர்ந்துள்ளார்.

முதல் உணவாக முட்டையைக் குறிப்பிட்ட அவர், "முட்டை என்பதே ஒரு கரு தான். இந்த முட்டையில் உள்ள சத்துக்கள் விந்தணுக்கள் உருவாவதற்கும், அதன் உற்பத்திக்கும் பெரிதும் உதவுகிறது" என்று கூறினார். முட்டைகளில் உயர்தரமான புரோட்டீன், வைட்டமின் பி12, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளன. இதில் உள்ள வைட்டமின் பி12 விந்தணுக்களில் டி.என்.ஏ உருவாக்கம் மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே போதுமான அளவு வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உட்கொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் நீந்தும் திறன் போன்றவற்றை மேம்படுத்துவதாக ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே ஆண்களே தினமும் தவறாமல் முட்டை சாப்பிடுங்கள்.

இரண்டாவதாக கீரைகள் குறித்து அவர், "கீரைகளும் விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும், எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவுகிறது. கீரைகளில் உள்ள ஃபோலேட், விந்தணுக்களின் அமைப்பு மற்றும் வடிவம் சரியாக இருப்பதற்கும், அதன் டிஎன்ஏ-வை சரியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது" என்று கூறினார். ஆகவே விந்தணு தொடர்பான பிரச்சனைகள் ஏதும் வரக்கூடாதெனில், கீரைகளை வாரத்திற்கு 3 முறை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவதாக பருப்பு வகைகள் மற்றும் கொள்ளு குறித்து, "பருப்பு வகைகள் மற்றும் கொள்ளு ஆகியவை விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, விந்து கெட்டிப்பட உதவுகிறது" என்று டாக்டர் கூறினார். எனவே விந்தணு பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மற்றும் கருத்தரிக்க முயலும் ஆண்கள் தங்களின் உணவில் புரோட்டீன் நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் கொள்ளுப் பருப்பை அடிக்கடி சேர்த்து வாருங்கள். இதன் மூலம் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நான்காவதாக வேர்க்கடலை மற்றும் பலாப்பழ விதை குறித்து, "விந்தணுக்களின் எண்ணிக்கையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த சாப்பிட வேண்டிய மற்றொரு உணவுப் பொருட்கள்தான் வேர்க்கடலையும், பலாப்பழ விதையும். இவை இரண்டுமே விந்துவைக் கெட்டிப்படுத்த உதவுகின்றன. இதற்கு அதில் உள்ள எல் அர்ஜினைன் என்னும் மூலப்பொருள்தான் காரணம். இது தவிர பாதாம், பிஸ்தா, முந்திரி, பூசணி விதை போன்றவைகளும் விந்து கெட்டிப்படப் பெரிதும் உதவி புரியும்" என்று டாக்டர் கூறினார்.

ஐந்தாவதாக வாழைப்பழம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த கொழுப்பு மீன்கள் குறித்து, "கடைசியாக ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்றால் அது வாழைப்பழமும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களும்தான். இவை இரண்டுமே ஆண்களின் விந்து கெட்டிப்படுவதற்கும், அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நீந்தும் திறனை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன" என்று கூறினார்.

விந்துவைக் கெட்டிப்படுத்த மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வருவது மட்டுமல்லாமல், மதுப் பழக்கம், சிகரெட் பழக்கம் போன்றவற்றைக் கைவிட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும். முக்கியமாக பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்களின் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க