கள்ளக்காதலில் இருப்பவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களாம்: கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

கள்ள உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவை மறைக்க பொதுவாக என்னென்ன வழிகளை பயன்படுத்துகிறார்கள்? உறவில் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.


கள்ளக்காதலில் இருப்பவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களாம்: கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

இன்றைய காலத்தில் காதல் மற்றும் திருமண உறவுகளில் நம்பிக்கை பிரச்சனைகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிலர் தங்களின் உறவை மறைத்து வைத்து இரட்டை வாழ்க்கை நடத்த முயற்சிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒருவர் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் அந்த உறவை தங்கள் வாழ்க்கைத்துணைக்கு தெரியாமல் பாதுகாக்க பல்வேறு முறைகளை பயன்படுத்துவார்கள் என கூறப்படுகிறது. அதுபோன்ற சில பொதுவான அறிகுறிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

டிஜிட்டல் உலகம் வளர்ந்துள்ள இந்த காலத்தில், மொபைல் போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் முக்கிய ஆதாரங்களாக மாறியுள்ளன. கள்ள உறவில் இருப்பவர்கள் பொதுவாக தங்கள் மெசேஜ்கள், புகைப்படங்கள் மற்றும் அழைப்பு விவரங்களை அடிக்கடி அழித்துவிடுவார்கள். மொபைலுக்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்புகள் வைத்திருப்பதோடு, சமூக வலைத்தள செயலிகளுக்கும் தனிப்பட்ட பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவார்கள்.

மேலும், தங்கள் நடத்தை மீது சந்தேகம் வராமல் இருக்க மிகவும் இயல்பாக நடந்து கொள்ள முயற்சிப்பார்கள். வழக்கமாக எப்படி பழகுவார்களோ அதேபோலவே தொடர்வதன் மூலம் சந்தேகத்தை தவிர்க்க முயற்சி செய்வார்கள்.

தங்கள் அன்றாட வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றங்களை காட்டாமல் இருப்பார்கள். உடை, தோற்றம் அல்லது செலவுகளில் மாற்றம் இருந்தாலும், அது கவனிக்கப்படாத வகையில் பார்த்துக் கொள்வார்கள்.

சில சமயங்களில் நண்பர்களையும் இந்த ரகசிய உறவை மறைக்க பயன்படுத்தக்கூடும். வெளியே செல்லும் போது நண்பர்களின் பெயரை காரணமாக சொல்லுதல் அல்லது பொய்களை சொல்ல வைப்பது போன்ற செயல்களும் இடம்பெறலாம்.

அதேபோல், தங்கள் கள்ள உறவை அடிக்கடி வெளிப்படுத்தக்கூடிய சூழலை தவிர்க்க, சந்திப்புகளின் எண்ணிக்கையையும் குறைத்து வைத்திருப்பார்கள். இதனால் சந்தேகங்கள் எழும் வாய்ப்பு குறையும் என நினைப்பார்கள்.

சிலர் தங்கள் வாழ்க்கைத்துணை மீது திடீரென அதிக அன்பு மற்றும் கவனம் காட்டத் தொடங்குவார்கள். இதன் மூலம் சந்தேகத்தை திசைதிருப்ப முயற்சிக்கலாம்.

மேலும், ரகசியமான சமூக வலைத்தள கணக்குகள் அல்லது கூடுதல் மொபைல் போன்களை பயன்படுத்துவது போன்ற செயல்களும் காணப்படலாம். சிலர் தங்கள் கள்ள உறவில் இருக்கும் நபரை “நண்பர்” அல்லது “சக ஊழியர்” என அறிமுகப்படுத்தி சந்தேகத்தை தவிர்க்க முயற்சிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இத்தகைய அறிகுறிகள் மட்டும் ஒருவரின் நடத்தை குறித்து உறுதியான முடிவுக்கு வர போதுமானவை அல்ல. எந்த உறவிலும் திறந்த உரையாடல், நம்பிக்கை மற்றும் புரிதல் மிகவும் முக்கியமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க