உல்லாசம் அனுபவிக்க வந்த வியாபாரிக்கு ஏற்பட்ட நிலை.. திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலி!

Published on: 31 May 2026, 08:10 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கர்நாடகாவில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க சென்ற வியாபாரி முகமது காசிம், அவரது கணவரால் திட்டமிட்டு தாக்கப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கள்ளக்காதலி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

உல்லாசம் அனுபவிக்க வந்த வியாபாரிக்கு ஏற்பட்ட நிலை.. திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலி!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பீடி காலனியைச் சேர்ந்த முகமது காசிம் (27), பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது முன்னாள் காதலியான அர்பியா கவுசருக்கு திருமணமாகி, அவர் தனது கணவர் முகமது அக்பருடன் பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தார்.

திருமணத்திற்குப் பின்னரும் முகமது காசிமுடன் அர்பியா கவுசர் தொடர்ந்து கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 25ம் தேதி உல்லாசம் அனுபவிப்பதற்காக பேடராயனபுராவில் உள்ள அர்பியாவின் வீட்டிற்கு முகமது காசிம் வந்திருந்தார். இதனை அறிந்த முகமது அக்பர், தனது உறவினர்களான ஓவைஸ் வாசா மற்றும் முகமது சாந்த் பாஷாவுடன் சேர்ந்து, காசிமை கையும் களவுமாக பிடித்து தாக்கி உதைத்தனர். பலத்த காயமடைந்த காசிம், ராமநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முகமது காசிமை கொலை செய்வதற்கு கள்ளக்காதலி அர்பியா கவுசரும் திட்டமிட்டு உதவியுள்ளார் என்பது தெரியவந்தது.

திருமணத்திற்கு முன்பு காசிமை காதலித்த அர்பியா, சமீபத்தில் சமூக வலைதளம் மூலம் மீண்டும் அவருடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளத்தொடர்பை ஆரம்பித்துள்ளார். இதனை அறிந்த கணவர் முகமது அக்பர் கண்டித்தும், அவர் தொடர்பை கைவிடவில்லை.

இதன் காரணமாகவே முகமது காசிமை தீர்த்துக்கட்ட திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு அர்பியாவும் உடந்தையாக இருந்ததால், அவரையும் கைது செய்த போலீசார், முகமது அக்பர், ஓவைஸ் வாசா, முகமது சாந்த் பாஷா உட்பட நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW