7 வயது மகனை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் மீண்டும் ஓடிய பெண் – பரபரப்பு சம்பவம்

கர்நாடகாவில் 7 வயது மகனை விட்டுவிட்டு காதலனுடன் இருமுறை தப்பிச் சென்ற பெண் தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவும் வைரலாகியுள்ளது.


7 வயது மகனை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் மீண்டும் ஓடிய பெண் –  பரபரப்பு சம்பவம்

கர்நாடக மாநிலத்தில் குடும்பத்தை விட்டு கள்ளக்காதலனுடன் இருமுறை தப்பிச் சென்ற பெண்ணைச் சுற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாசன் தாலுகா முக்கந்தூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அரக்கல்கோடு பகுதியை சேர்ந்த ஹர்ஷிதா ஆகியோருக்கு 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயது மகன் உள்ளார்.

இந்த நிலையில், ஹர்ஷிதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சச்சின் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 30ஆம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வெளியேறிய ஹர்ஷிதா, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த கணவர் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில், ஹர்ஷிதா தனது கள்ளக்காதலன் சச்சினுடன் சென்றது தெரியவந்தது. பின்னர் அவரை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்தனர். அங்கு கணவருடன் செல்ல அவர் முதலில் மறுத்தாலும், குடும்பத்தினரின் கோரிக்கைக்கு இணங்கி மீண்டும் கணவருடன் செல்ல சம்மதித்தார்.

ஆனால், மறுநாளே ஹர்ஷிதா மீண்டும் காதலனுடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு, இருவரும் காரில் இருந்தபடியே மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க