“19 வயசுல கல்யாணம்... 4 மாத குழந்தையை இழந்தேன்”: கண்கலங்க வைத்த கெனிஷாவின் உருக்கமான பேச்சு

Published on: 15 May 2026, 09:49 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கிடையில், பாடகியும் தெரபிஸ்டுமான கெனிஷா தனது வாழ்க்கையில் சந்தித்த வேதனைகளை பகிர்ந்துள்ளார். திருமணம், குடும்ப இழப்பு மற்றும் குழந்தையை இழந்த அனுபவம் குறித்து அவர் உருக்கமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

“19 வயசுல கல்யாணம்... 4 மாத குழந்தையை இழந்தேன்”: கண்கலங்க வைத்த கெனிஷாவின் உருக்கமான பேச்சு

Ravi Mohan மற்றும் Aarthi Ravi தொடர்பான விவாகரத்து சர்ச்சை இன்னும் பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், பாடகியும் தெரபிஸ்டுமான Kenishaa Francis வெளியிட்டுள்ள உணர்ச்சி மிகுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரவி மோகனுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கெனிஷா ஒன்றாக தோன்றியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதையடுத்து, ஆர்த்தி ரவி தொடர்பாக அவதூறு கருத்துகள் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் கெனிஷா வெளியிட்ட நீண்ட வீடியோவில் தனது வாழ்க்கையில் சந்தித்த துயரங்களை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சிறுவயதில் உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், பின்னர் இளம் வயதிலேயே திருமணம் ஆனதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருமண வாழ்க்கையில் கடுமையான உடல் மற்றும் மன உளைச்சல்களை சந்தித்ததாகவும், கணவரின் தாக்குதலால் நான்கு மாத கர்ப்பத்தில் இருந்த குழந்தையை இழந்ததாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்திற்குப் பிறகு நீண்ட காலம் மன வேதனையில் இருந்ததாகவும், பின்னர் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறி தனக்கென புதிய வாழ்க்கையை கட்டியெழுப்ப தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், வாழ்க்கையை நடத்த பார்களில் பாடியதாகவும், குறைந்த சம்பளத்திற்காக கூட கடுமையாக உழைத்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார். தன்னை குறிவைத்து சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்கள் மிகவும் வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவி மோகனை முதலில் சந்தித்த போது அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு தெரபிஸ்டாக சில ஆலோசனைகள் வழங்கியதன் மூலம் தான் நட்பு தொடங்கியதாகவும் கெனிஷா விளக்கமளித்துள்ளார்.

“ஒரு குழந்தையை இழந்த பெண் இன்னொருவரின் குடும்பத்தை கெடுக்க நினைப்பாளா?” என்று கேள்வி எழுப்பிய அவர், சமூக வலைதளங்களில் தேவையற்ற விமர்சனங்களை பரப்புவோர் தங்களது வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாடகியாகவும் தெரபிஸ்டாகவும் அறியப்படும் கெனிஷா, பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடையே தனி இடம்பிடித்துள்ளார். சமீபத்திய சர்ச்சைகள் காரணமாக அவரது பெயர் தொடர்ந்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் அதிகாரப்பூர்வமாக முடிவடையாத நிலையில், இந்த சர்ச்சை தொடர்ந்து புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW