கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்... நேரில் பார்த்த கணவர் குடும்பத்தினர்... அடுத்து நடந்த கோரம்

கர்நாடகாவில் திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த பெயிண்டரை, அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாகப் பிடித்த கணவரும் அவரது குடும்பத்தினரும் சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்... நேரில் பார்த்த கணவர் குடும்பத்தினர்... அடுத்து நடந்த கோரம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் பீடி காலனியைச் சேர்ந்த முகமது காசிம் (27), ஒரு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளம்பெண்ணுடன் இவருக்குக் காதல் ஏற்பட்டது.

ஆனால், அந்தப் பெண்ணின் வீட்டாருக்கு இந்தக் காதல் விவகாரம் தெரியவந்ததும், அவர்கள் வேறு ஒரு வாலிபருடன் அவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். திருமணமான பிறகும், முகமது காசிமுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான கள்ளக்காதல் தொடர்ந்தது.

அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்து உல்லாசமாக இருந்தும் தங்கள் உறவை வளர்த்து வந்தனர். முகமது காசிம் தனது கள்ளக்காதலியைச் சந்திப்பதற்காக அடிக்கடி பெங்களூருவுக்கு வரத் தொடங்கினார்.

முகமது காசிம் அடிக்கடி வருவது குறித்து அறிந்த பெண்ணின் கணவரும், அவரது குடும்பத்தினரும், அப்பெண்ணிடம் விசாரித்தபோது, "இவர் என் உறவுக்காரர்" என்று கூறி ஏமாற்றி வந்தார். அவரை அடிக்கடி வர வேண்டாம் என்று கண்டித்தும், அந்தப் பெண் பேச்சைக் கேட்காமல் முகமது காசிமை வீட்டிற்கு அழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தார். இதனால் கணவரும் அவரது குடும்பத்தினரும் கொதித்தெழுந்தனர்.

கடந்த 25-ந் தேதி, முகமது காசிம் பேடராயனபுரா பகுதியில் உள்ள தனது கள்ளக்காதலியின் வீட்டிற்குச் சென்று, அவருடன் உல்லாசமாக இருந்தார். இதனைக் கவனித்த கணவரும் அவரது குடும்பத்தினரும், காசிம் அப்பெண்ணின் வீட்டிற்குள் இருந்தபோதே கையும் களவுமாகப் பிடித்தனர்.

தொடர்ந்து, அவரைச் சாலைக்கு இழுத்துச் சென்று உருட்டுக் கட்டை, கற்கள் மற்றும் இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கினர். அருகிலிருந்தவர்கள் தடுத்து நிறுத்திய பின்னரே தாக்குதல் நின்றது. படுகாயமடைந்த முகமது காசிம், உடனே ராமநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என ஐந்து பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர