எரிபொருள் விலை குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட முக்கிய தகவல்

மத்திய கிழக்குப் போருக்கு முந்தைய சந்தை நிலவரங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. இன்றைய உலக சந்தை விலைகளின் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்.


எரிபொருள் விலை குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட முக்கிய தகவல்

உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (Ceypetco) முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது எரிபொருள் விலையில் ஓரளவு குறைவு காணப்படுவதாகவும், எனினும் மத்திய கிழக்குப் போருக்கு முன்னர் உலக சந்தையில் நிலவிய எரிபொருள் விலையை விட தற்போதைய விலை இன்னும் அதிகமாகவே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினத்திற்கான (29) உலக சந்தையின் எரிபொருள் விலை இன்று பிற்பகலுக்குள் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்த அவர், அந்த நிலைமைகளைப் பரிசீலித்த பின்னரே உள்நாட்டு எரிபொருள் விலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

எரிபொருள் விலை தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், விலை திருத்தம் குறித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படுமா அல்லது தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யத் தீர்மானிக்கப்படுமா என்பது அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், நேற்று (28) 'WTI' ரக மசகு எண்ணெய் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அந்தக் கப்பலில் 89,000 மெட்ரிக் டன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் 31-ம் திகதியளவில் 'மெர்பன்' ரக மசகு எண்ணெய் கப்பல் ஒன்று மீண்டும் நாட்டை வந்தடையவுள்ளதுடன், அந்தக் கப்பலில் 95,000 மெட்ரிக் டன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க