“என் பையன் முன்னாடி இப்படி தான் செய்வேன்” – வைரலாகும் சீரியல் நடிகை பரீனா அசாத்தின் பேட்டி

சீரியல் நடிகை பரீனா அசாத் தனது மகனுக்குப் பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுக்க, வீட்டில் ஷார்ட்ஸ் அணிந்து பழக்குவதாகக் கூறிய சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரலாகி, பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.


“என் பையன் முன்னாடி இப்படி தான் செய்வேன்” – வைரலாகும் சீரியல் நடிகை பரீனா அசாத்தின் பேட்டி

தமிழ் தொலைக்காட்சித் துறையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் அழகு’,பாரதி கண்ணம்மா’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் பரீனா அசாத்.

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி எனப் பல சேனல்களில் பணியாற்றிய இவர், கிச்சன் கலாட்டா’, அஞ்சறைப்பெட்டி’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலமும் பார்வையாளர்களைக் கவர்ந்தவர். 

திருமணமாகி ஒரு மகனுடன் மகிழ்ச்சியாக வாழும் பரீனாவின் சமீபத்திய பேட்டி ஒன்று, குழந்தை வளர்ப்பு குறித்த அவரது முற்போக்கான அணுகுமுறையால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை வளர்ப்புப் பற்றி பரீனா அந்தப் பேட்டியில் கூறியதாவது: “முதலில் பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைவிட, ஆண் பிள்ளைகள் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். நான் என் வீட்டில் சின்னச் சின்ன ஆடைகள், ஷார்ட்ஸ் எல்லாம் அணிந்துகொள்வேன்.

என் பையன் அதைப் பார்க்கும்போது, அது அவனுக்குச் சாதாரணமான விஷயமாகவே தெரியும். வெளியில் வேறு ஒரு பெண் ஷார்ட்ஸ் அணிந்து சென்றாலும், அது அவனுக்குக் கவர்ச்சியாகவோ, அசிங்கமாகவோ தெரியாது. அவன் அதைப் பார்த்தே பழகிவிட்டான்.

அதனால், பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகவோ, தப்பான நோக்கத்திலோ பார்க்கக் கூடாது என்பதைச் சிறுவயதிலிருந்தே சொல்லிக்கொடுத்து, அந்த அடிப்படையில் அவனை வளர்த்தால், எதிர்காலத்தில் பெண்களை மதிக்கும் ஆணாக அவன் மாறுவான்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பரீனாவின் இந்தக் கருத்து, சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு, வெகுவாகப் பகிரப்பட்டு வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க