புற்றுநோய் நினைத்து இனி கவலைப்பட வேண்டாம்... புற்றுநோயை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் AI தொழில்நுட்பம்!
மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், கணையப் புற்றுநோயை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த AI தொழில்நுட்பம், நோய் உருவாகும் முன்பே எச்சரிக்கை அளிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
பொதுவாக கணையப் புற்றுநோய் ஆரம்ப நிலையில் தெளிவான அறிகுறிகளைக் காட்டாமல் இருப்பதால், நோய் கண்டறியப்படும் போதே கடுமையான கட்டத்தை எட்டிவிடுகிறது. இதுவே சிகிச்சையைச் சிரமமாக்கும் முக்கிய காரணமாகும்.
புதிய ஆய்வில், நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை விரிவாகப் பகுப்பாய்வு செய்து, உடலில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்களையும் கண்காணிக்கும் முறையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் கணையப் புற்றுநோய் உருவாகும் சாத்தியத்தை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், நோய் பரவுவதற்கு முன்பே சிகிச்சையைத் தொடங்கலாம். அறுவை சிகிச்சை அல்லது மருந்துகள் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும்.
நோயாளிகளின் உயிர் பிழைப்புத் திறனும் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் பரிசோதனை முறைகளில் சேர்க்கப்பட்டால், கணையப் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவு குறைக்க முடியும் என்ற நம்பிக்கை மருத்துவ வட்டாரங்களில் நிலவுகிறது.