இலங்கையில் தங்கத்தில் விலையில திடீர்  சரிவு; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

Published on: 09 Apr 2026, 03:27 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (09) ஒரு பவுணுக்கு 5,000 ரூபாயால் குறைந்துள்ளதாக நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தில் விலையில திடீர்  சரிவு; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (09) ஒரு பவுணுக்கு 5,000 ரூபாயால் குறைந்துள்ளதாக நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி நுகர்வோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் , தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக, விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW