“வீரர்களை இவ்வளவு அலட்சியமாக கையாளலாமா?” – சென்னை அணியிடம் அஸ்வின் கடும் கேள்வி

Published on: 20 Apr 2026, 06:38 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

CSK வீரர் ஆயுஷ் மாத்ரே காயத்துடன் விளையாடிய விவகாரம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் விமர்சனம் செய்துள்ளார். அணியின் Injury Management குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

“வீரர்களை இவ்வளவு அலட்சியமாக கையாளலாமா?” – சென்னை அணியிடம் அஸ்வின் கடும் கேள்வி

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சுற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது. காயத்துடன் விளையாடிய ஆயுஷ் மாத்ரே குறித்து முன்னாள் வீரர் அஸ்வின் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மாத்ரே 13 பந்துகளில் 30 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார். ஆனால், பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ஓடுவதில் சிரமப்பட்டார். சில நிமிடங்களுக்குள் அவர் தனது விக்கெட்டையும் இழந்தார்.

இந்த நிலையை விமர்சித்த அஸ்வின், “மாத்ரே பேட்டிங் செய்ய வரும்போதே முழங்காலில் கட்டுடன் வந்தார். இது சாதாரண தசைப்பிடிப்பு போல தெரியவில்லை. அவர் கடந்த போட்டிகளில் பீல்டிங் கூட செய்யவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்” எனக் கூறினார்.

மேலும், “வீரர்களுக்கு காயம் இருந்தால் அதை சரியாக கண்காணித்து உடனடியாக சிகிச்சை அளிப்பது அணியின் பொறுப்பு. Physiotherapist பரிசோதித்த பிறகும், அவரை விளையாட வைத்து ஓடவைத்தது சரியல்ல. இது பெரிய காயமாக மாறினால், அவர் பல வாரங்கள் வெளியேற நேரிடும். இப்படிப் பட்ட அலட்சியம் ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW