தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி: நிம்மதிப் பெருமூச்சில் இல்லத்தரசிகள்!

Published on: 04 Mar 2026, 11:20 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தங்கம் விலையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாகக் குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி: நிம்மதிப் பெருமூச்சில் இல்லத்தரசிகள்!

சர்வதேச அளவில் நிலவிய போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக கடந்த சில நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் விலை, தற்போது அதிரடியாகச் சரிந்து வரத் தொடங்கியுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தங்கம் விலையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாகக் குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே சரிவைச் சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (04.03.2026) சவரனுக்கு ரூ. 2,120 வரை குறைந்து ஒரு சவரன் ரூ. 1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 265 குறைந்து ரூ. 15,200 ஆகப் பதிவாகியுள்ளது.

 கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ. 5,600 வரை சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக மார்ச் 1-ம் தேதி ஒரு சவரன் ரூ. 1,26,200 என உச்சத்தில் இருந்த விலை, தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ. 295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஐந்து நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, தற்போது மீண்டும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் என்கிற நிலைக்கு வந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது சாதகமான சூழலாகக் கருதப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW