முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி... இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்...என்ன நடந்தது?

காதல் பெயரில் திருமணம் செய்து விட்டு மாயமான இளைஞர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே திருமணமாகி இரட்டை குழந்தைகளின் தந்தை என்ற உண்மை பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி... இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்...என்ன நடந்தது?

மகாராஷ்டிராவின் Nagpur நகரத்தில் காதல் மற்றும் திருமணம் என்ற பெயரில் நடந்த ஏமாற்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண், கல்லூரி நாட்களில் அறிமுகமான இளைஞரின் உணர்ச்சி மிக்க வார்த்தைகளால் நம்பிக்கை வைத்து திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்களது உறவு, வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பின்னரும் தொலைபேசி வழியாக தொடர்ந்து வளர்ந்து காதலாக மாறியது. இளைஞர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் இறுதியில் பெண் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர், இருவரும் குடும்ப சம்மதம் இல்லாத சூழ்நிலையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, அதனை சட்டபூர்வமாக பதிவு செய்தனர். திருமணத்திற்குப் பிறகு முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், இளைஞர் திடீரென அதைத் தவிர்த்து, முதலில் பெற்றோரை சமாதானப்படுத்த வேண்டும் என கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

அதன்பிறகு நாட்கள் கடந்தும் எந்த தொடர்பும் இல்லாததால், பெண் சந்தேகத்தில் ஆழ்ந்தார். சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடர்பு கொண்ட இளைஞர், தன்னை Nagpur ரயில் நிலையத்தில் சந்திக்க அழைத்தார்.

ஆனால் அங்கு சென்ற பெண், ஒரு நாள் முழுவதும் காத்திருந்தும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்தார். தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது கைபேசி அணைக்கப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்த பெண் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். “திருமணம் செய்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டார்” என்று அழுதபடி கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

போலீஸ் விசாரணையில் வெளிவந்த தகவல் இந்த வழக்கை மேலும் அதிர்ச்சியாக மாற்றியது. குறித்த இளைஞர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு, இரட்டை குழந்தைகளின் தந்தையாக இருப்பது தெரியவந்தது.

இந்த உண்மை வெளிச்சம் பார்த்ததும், பெண்ணும் அவரது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க