டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை? – நேரடியாகக் கூறிய சுனில் கவாஸ்கர்

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், எதிர்வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை? – நேரடியாகக் கூறிய சுனில் கவாஸ்கர்

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், எதிர்வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடரில், இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப் போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்த முறையும் கோப்பையை தக்கவைக்குமா என்பதே அனைவரின் கவனமாக உள்ளது.

Suryakumar Yadav தலைமையிலான பலமான இந்திய அணி மீண்டும் டி20 உலகக்கோப்பையை வெல்லும் திறன் கொண்டதாக பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில், அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்வி தற்போது தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம், Sanju Samson-ன் தற்போதைய ஃபார்ம் ரசிகர்களையும் தேர்வாளர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இல்லை என்பதே. குறிப்பாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக தடுமாறிய நிலையில், Ishan Kishan சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார். இதன் காரணமாக, சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இஷான் கிஷன் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் Sunil Gavaskar கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், தேர்வுக்குழு இந்த விஷயத்தில் அமைதியாக இருக்காது என்றும், சஞ்சு சாம்சனுக்கு ஏற்கனவே போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால், அந்த வாய்ப்புகளை சஞ்சு சாம்சன் நிலையான ஆட்டமாக மாற்றத் தவறி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், Tilak Varma அணிக்குள் இடம்பிடிக்கும் பட்சத்தில், அவர் நேரடியாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கவாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில், தற்போதைய சூழலில் கேள்விக்குறியாக மாறியிருப்பது சஞ்சு சாம்சனின் இடம்தான் என்றும், ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனையே தேர்வாளர்கள் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இதன் அடிப்படையில், டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை என தனக்குத் தோன்றுவதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் தனது திறமையை நிரூபித்திருந்தாலும், தற்போதைய மோசமான ஃபார்ம் காரணமாக, பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியிலேயே அவர் அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்ற அவரது கருத்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர