“தோனி போல சிக்ஸ் அடிக்கணும்” – நேபாள் வீரர் நந்தன் யாதவின் ஜாலி பதில்

Published on: 09 Feb 2026, 12:36 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 2 முறை சாம்பியனான இங்கிலாந்து கத்துக்குட்டி அணியான நேபாளத்திடம் கடும் போராட்டத்துக்கு பிறகே வெற்றி பெற்றது.

“தோனி போல சிக்ஸ் அடிக்கணும்” – நேபாள் வீரர் நந்தன் யாதவின் ஜாலி பதில்

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் வலுவான அணியான இங்கிலாந்துக்கு எதிராக நேபாள் அணி கடுமையான போட்டியை வழங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு பரபரப்பான தருணங்களை அளித்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. கடைசி நேரம் வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில், நேபாள் அணி வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

போட்டிக்குப் பிறகு, “இந்த போட்டியிலிருந்து என்ன பாடம் கற்றீர்கள்?” என்ற கேள்விக்கு நேபாள் வீரர் நந்தன் யாதவ் சிரிப்புடன் பதிலளித்தார். “மகேந்திர சிங் தோனி போல சில சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்பதே நாங்கள் கற்ற பாடம்” என்று அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார். அவரது இந்த பதில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW