கனடாவில் திடீர் கட்டுப்பாடு! தற்காலிக விசாவில் சென்ற தமிழர்களுக்கு புதிய சிக்கல்

விசா காலம் முடிவடைந்தவுடன் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறைகள் இனி மேலும் கடுமையாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் திடீர் கட்டுப்பாடு! தற்காலிக விசாவில் சென்ற தமிழர்களுக்கு புதிய சிக்கல்

கனடாவிற்கு தற்காலிக விசாவில் பயணம் செய்தவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் அறிவித்துள்ளார். விசா காலம் முடிவடைந்தவுடன் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறைகள் இனி மேலும் கடுமையாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக விசாவில் கனடாவிற்கு வருபவர்கள் விசா காலம் முடிந்த பின்னரும் நாட்டில் தங்குகிறார்களா என்பதை கண்காணிக்க புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒருவர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவர்களின் தகவல்கள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் விசா காலம் முடிந்த பின் அவர்கள் வெளியேறியுள்ளார்களா என்பதை தானாக கண்டறியும் முறைமை இல்லாததால், அதனை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2026 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாகும் என கனேடிய குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது. விசிட்டர் விசா உள்ளிட்ட பல்வேறு தற்காலிக விசாக்களில் கனடாவிற்கு சென்றுள்ள தமிழர்களுக்கும் இந்த புதிய நடைமுறைகள் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர