பரபரப்பை ஏற்படுத்திய மெலானியா ட்ரம்ப்.. முன்கூட்டியே தெரியாது என ட்ரம்ப் அதிரடி

எப்ஸ்டீன் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை மறுத்து மெலானியா ட்ரம்ப் வெளியிட்ட திடீர் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது; அதற்கு ட்ரம்ப் அளித்த பதிலும் கவனம் ஈர்த்துள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய மெலானியா ட்ரம்ப்.. முன்கூட்டியே தெரியாது என ட்ரம்ப் அதிரடி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வெளியிட்ட திடீர் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிடப்போவது குறித்து முன்கூட்டியே தமக்குத் தெரியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகள் மற்றும் ஆவணங்கள் மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பல முக்கிய நபர்களின் பெயர்கள் அந்த கோப்புகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோர்களுடன் ட்ரம்ப் மற்றும் மெலானியாவின் பெயர்களும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், எப்ஸ்டீனின் நெருங்கிய தொடர்பாளரான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் உடன் மெலானியா பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்கள் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஊடகங்களை சந்தித்த மெலானியா, “எப்ஸ்டீனுடன் என்னை தொடர்புபடுத்தும் பொய்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். தமக்கு எப்ஸ்டீனுடன் எந்தவித நெருங்கிய தொடர்பும் இல்லை என்றும், பொதுவான சமூக நிகழ்ச்சிகளில் மட்டுமே சந்தித்ததாகவும் விளக்கமளித்தார்.

அதேபோல், மேக்ஸ்வெல்லுடன் ஏற்பட்ட மின்னஞ்சல் தொடர்பு சாதாரணமானது என்றும், அதற்கு வேறு அர்த்தம் கொடுக்கப்படக்கூடாது என்றும் கூறினார். மேலும், 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்தான் எப்ஸ்டீனை முதன்முறையாக சந்தித்ததாகவும், அப்போது அவரது பின்னணி குறித்து அறியவில்லை என்றும் தெரிவித்தார்.

தான் எப்ஸ்டீன் மூலம் ட்ரம்பை சந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மெலானியா மறுத்துள்ளார்.

இதற்கிடையில், இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், தன் மனைவி இப்படியான அறிக்கை வெளியிடுவதை முன்கூட்டியே அறியவில்லை என்றும், “மெலானியாவுக்கு எப்ஸ்டீனைத் தெரியாது” என்று கூறி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர