கணவனின் பிறப்புறுப்பை கடித்து குதறிய மனைவி... விசாரணையில் வெளியான தகவல்

Published on: 19 Mar 2026, 09:35 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் கணவனை கொலை செய்து தற்கொலையாக காட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சி. கள்ளக்காதலுக்காக திட்டமிட்டு செய்த குற்றம் விசாரணையில் வெளிச்சம்.

கணவனின் பிறப்புறுப்பை கடித்து குதறிய மனைவி... விசாரணையில் வெளியான தகவல்

மகாராஷ்டிராவில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது கணவனை கொலை செய்து, அதை தற்கொலையாக காட்ட முயன்றது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முதலில், அந்தப் பெண் தனது கணவனை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பிறகு, இது தற்கொலை என நம்ப வைக்க அந்தப் பெண் முயன்றுள்ளார்.

ஆனால், உயிரிழந்தவரின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் பிறப்புறுப்பு பற்களால் கடிக்கப்பட்ட அடையாளங்களைக் கண்டு பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடற்கூறாய்வு அறிக்கையில் இது கொலை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காகவே இந்தக் கொலை திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார். மேலும், இந்தச் சம்பவத்தில் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW