மது விருந்தில் ஆண் நண்பர்களுடன் பங்கேற்ற இளம்பெண்ணுக்கு ஏறப்பட்ட நிலை!
விசாகப்பட்டினத்தில் இளம்பெண் மரணம் தொடர்பாக நண்பர்கள் மீது தாக்குதல் மற்றும் சந்தேக மரணம் குற்றச்சாட்டு. போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாகப் பட்டினம் நகரில் நடந்த துயர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோடுகுல பாலம் பகுதியில் வசித்து வந்த இளம்பெண், தன்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி மது அருந்தும் பழக்கத்தின் ஒரு பகுதியாக, கடந்த சனிக்கிழமை இரவு ஒரு தங்கும் விடுதியில் சந்தித்துள்ளார்.
அன்று இரவு அவர்கள் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து, நள்ளிரவு வரை ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததாகவும், அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு எதிராக தாக்குதல் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்திற்குப் பிறகு, அந்த இளம்பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். ஆரம்பத்தில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக நண்பர்கள் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உடலில் காயங்கள் இருந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் இது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
பெற்றோர், தங்களது மகள் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என்றும், பின்னர் அது தற்கொலை போல காட்டப்பட்டிருக்கலாம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் பேரில், ஆந்திரா காவல்துறை சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.