அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட விசித்திர தங்க நிற உருண்டை
அமெரிக்காவில் ஆழ்கடலில் ஒரு மர்மமான தங்க நிற உருண்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆழ்கடலில் ஒரு மர்மமான தங்க நிற உருண்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உருண்டை அலாஸ்கா கடற்கரைக்கு அப்பால், கடலடியில் சுமார் 3,300 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது. சுமார் 10 சென்டிமீட்டர் அகலமுடைய இந்த உருண்டையின் ஒருபுறத்தில் சிறிய துளை ஒன்று இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் NOAA அமைப்பு அனுப்பிய ஆழ்கடல் ரோபோ—ROV (Remotely Operated Vehicle)—வின் கேமராவில் இந்த விசித்திர உருண்டை முதன்முதலில் பதிவானது. ரோபோவின் இயந்திரக் கை மூலம் அதனை மெதுவாகத் தொட்டுப் பார்த்தபோது, அது கல்லைப் போல கடினமாக இல்லை எனவும், மெதுவாக அமுங்கும் தன்மையுடன் மென்மையாக இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தற்போது இந்த தங்க நிற உருண்டை ஆய்வுக்கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் உண்மையான தன்மையை கண்டறியும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
Editorial Staff