பொங்கல் பரிசுடன் ரொக்கம் கிடைக்குமா? – தமிழக அரசு விரைவில் அறிவிப்பு!
2026 பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. காரணம், ஏப்ரல் 2026-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனால், அரசு பொங்கல் முன்னிட்டு ரொக்க உதவி வழங்கும் என பொதுமக்கள் நம்பினர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது ஒரு நிலையான நடைமுறையாக உள்ளது. 2021-ல் அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுடன் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, திமுக ஆட்சிக்கு வந்து 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ரூ.1,000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. எனினும், 2025-ல் ரொக்கம் இல்லாமல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2026 பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. காரணம், ஏப்ரல் 2026-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனால், அரசு பொங்கல் முன்னிட்டு ரொக்க உதவி வழங்கும் என பொதுமக்கள் நம்பினர்.
நேற்று, தமிழ்நாடு அரசு 2026 பொங்கல் பரிசு தொகுப்புக்காக ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. இது ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வாங்குவதற்கானது என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, “இந்த ஆண்டும் ரொக்கம் இல்லையா?” என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்தது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியதாவது, பரிசு பொருட்களுக்கான நிதி முன்கூட்டியே ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், ரொக்கப் பணம் குறித்த முடிவு நிதித் துறை மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடையே கலந்துரையாடப்பட்ட பின்னர் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்பது. ஏனெனில், ரொக்கத்தை உடனடியாக பெற்று ரேஷன் கடைகள் வழியாக விநியோகிப்பது எளிது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
தற்போது, அரசு வட்டாரங்கள் ரூ.2,000 அல்லது ரூ.3,000 என எந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்பதை மதிப்பீடு செய்து வருவதாகவும், இன்றோ அல்லது நாளையோ முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
Editorial Staff