பேரிடருக்கு மத்தியில் இலங்கையில் கொடூர இரட்டை கொலை – ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை
இலங்கையின் புத்தளம் மாவட்டம், நுரைச்சோலை பகுதியில் நேற்றிரவு நடந்த வன்முறை சம்பவத்தில் ஆண்–பெண் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் புத்தளம் மாவட்டம், நுரைச்சோலை பகுதியில் நேற்றிரவு நடந்த வன்முறை சம்பவத்தில் ஆண்–பெண் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்தது நாவக்கடுவ பகுதியில். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் படுகாயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், 38 வயது ஆணும், 35 வயது பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்றொரு பெண் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
பொலிஸ் விசாரணையில், இந்த கொலை சம்பவம் தனிப்படை தகராறு காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தைச் சேர்ந்த 23 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பொலிஸ் பாதுகாப்பில் புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொடூரமான சம்பவம் குறித்து நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Editorial Staff