19 நாடுகளுக்கான புகலிட மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களை இடைநிறுத்தம் அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், 19 நாடுகளிலிருந்து வரும் அனைத்து குடியேற்ற மற்றும் புகலிட விண்ணப்பங்களையும் உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.

19 நாடுகளுக்கான புகலிட மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களை இடைநிறுத்தம் அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், 19 நாடுகளிலிருந்து வரும் அனைத்து குடியேற்ற மற்றும் புகலிட விண்ணப்பங்களையும் உடனடியாக இடைநிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, வாஷிங்டன் டி.சி.-யில் இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) ஒரு குறிப்பாணை வெளியிட்டு, இந்த 19 நாடுகளிலிருந்து வரும் அனைத்து நிலுவையில உள்ள புகலிடம் மற்றும் சலுகை விண்ணப்பங்களுக்கும் உடனடியாக “விரிவான மறுபரிசீலனை” மற்றும் “தீர்ப்பு நிறுத்திவைப்பு” ஆகியவற்றை கட்டாயப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை முக்கியமாக ஆப்கானிஸ்தான், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் உட்பட பாதுகாப்பு அச்சுறுத்தல்களுடன் தொடர்புடைய நாடுகளைச் சேர்ந்தவர்களை பெரிதும் பாதிக்கிறது. இவர்களில் பலர் கிரீன் கார்டு அல்லது அமெரிக்க குடியுரிமை பெற நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.

குடியேற்ற வழக்கறிஞர்கள் இந்த முடிவு ஏற்கனவே குடியுரிமைக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களை கடுமையாக பாதிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளனர். தற்போது, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் புகலிட விண்ணப்பங்களுக்கான முடிவுகளுக்காக காத்திருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கைகளில் கடுமையான மாற்றத்தையும், தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளை கடுமையாக பின்பற்றும் நிலைப்பாட்டையும் எதிரொலிக்கிறது.