சர்வதேச ரீதியில் தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்

Published on: 24 Nov 2025, 06:11 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சர்வதேச பொருளாதார சந்தைகளில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் நிகழலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சர்வதேச ரீதியில் தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்

சர்வதேச பொருளாதார சந்தைகளில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் நிகழலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த அதிரடி கூற்று, 'பாபா வங்கா' என அழைக்கப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரையோ தத்சுகி என்ற பார்வையற்ற பெண் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாபா வங்காவின் முந்தைய பல கணிப்புகள் நிஜமாகியுள்ளன என்ற காரணத்தால், இவரது புதிய எச்சரிக்கையும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

சர்வதேச அறிக்கைகளின் படி, 2026ஆம் ஆண்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகலாம் என அவர் முன்னறிவித்ததாக குறிப்பிடப்படுகிறது. அதன் விளைவாக தங்க விலைகளில் பாரிய அதிர்வு ஏற்பட்டுச் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.

சில பொருளாதார நிபுணர்கள் தங்கம் தனது “பாதுகாப்பான முதலீட்டு” என்ற அந்தஸ்தை இழக்கக்கூடும் என்றும், சிலர் மாறாக தங்கம் இன்னும் உயர்ந்த விலையைத் தொடக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

பணமதியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டால், தங்கம் மற்ற பொதுவான பொருட்களைப் போலவே மதிப்பிழந்து விடலாம் என்ற கருத்தும் பாபா வங்காவால் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனுடன், உலக நாணய அமைப்புகளில் திடீர் சரிவு, வங்கித் துறையில் பிரச்சினைகள், அதிகப்படியான பணவீக்கம் போன்ற நிகழ்வுகள் 2026இல் ஏற்படலாம் என்ற அவருடைய கணிப்பும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல்களால் எதிர்கால பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச அளவில் அச்சம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW