இளையராஜாவின் பெயர் – புகைப்படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்பட இசையின் தலைசிறந்த படைப்பாளரான இளையராஜா, பல மொழித் திரைப்படங்களுக்காக ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 


இளையராஜாவின் பெயர் – புகைப்படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இசையமைப்பாளர் இளையராஜாவின் பெயரும் புகைப்படமும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட தளங்களில் வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் திரைப்பட இசையின் தலைசிறந்த படைப்பாளரான இளையராஜா, பல மொழித் திரைப்படங்களுக்காக ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 

சமீபத்தில், சோனி மியூசிக், ஸ்பாட்டிபை, பல யூடியூப் சேனல்கள் மற்றும் பிற இசை நிறுவனங்கள் அனுமதியின்றி தனது பெயர், புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்திவருவதாக குற்றம்சாட்டி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தனது புகைப்படம், பெயர், குரல் ஆகியவை வியாபார ரீதியாக பயன்படுத்தப்படாதவாறு தடை விதிக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ள தனது படங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனுமதியின்றி பயன்படுத்தியதன் மூலம் சம்பாதிக்கப்பட்ட வருமான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதனை பரிசீலித்த உயர்நீதிமன்றம், இளையராஜாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தக்கூடாது என இடைக்கால தடை விதித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க