சமந்தாவின் இரண்டாவது திருமணம்: இயக்குநர் ராஜ் நிடிமொருவார் யார்?

சமந்தா, 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்திருந்தார். ஆனால் 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவை அறிவித்தனர். அதன் பின்னர், கடந்த ஆண்டில் நாக சைதன்யா நடிகை சோபிதா தூலிபாவை திருமணம் செய்தார்.

சமந்தாவின் இரண்டாவது திருமணம்: இயக்குநர் ராஜ் நிடிமொருவார் யார்?

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்துள்ளார். கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் லிங் பைரவி கோவிலில் அதிகாலை நேரத்தில் இந்த திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்தில் நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் என சுமார் 30 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

சமந்தா, 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்திருந்தார். ஆனால் 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவை அறிவித்தனர். அதன் பின்னர், கடந்த ஆண்டில் நாக சைதன்யா நடிகை சோபிதா தூலிபாவை திருமணம் செய்தார்.

ராஜ் நிடிமொரு, கிருஷ்ணா தசரகோதபள்ளியுடன் இணைந்து பல பாலிவுட் திரைப்படங்களை இயக்கி, தயாரித்தவர். 2021 ஆம் ஆண்டு வெளியான ‘தி பேமிலி மேன்’ இணையத் தொடரில் சமந்தா நடித்திருந்தார்.

அந்தத் தொடரின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நெருக்கம் உறவாக வளர்ந்து, பல நிகழ்வுகளிலும் இருவரும் ஒருசேரப் பங்கேற்கத் தொடங்கினர்.

ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த ராஜ் நிடிமொறு, 2015 ஆம் ஆண்டு ஷ்யமாலி தேவை திருமணம் செய்திருந்தார்; 2022 ஆம் ஆண்டு அந்தத் திருமணம் விவாகரத்துடன் முடிந்தது.