இயற்கை அனர்த்தங்களில் 15 இலட்சம் கோழிகள் உயிரிழப்பு – முட்டை உற்பத்தியில் 40% சரிவு
முட்டை உற்பத்தி 40% வரை குறைந்துள்ளதாகவும், அடுத்து வரும் நாட்களில் முட்டை விலை கணிசமாக உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை.
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் காரணமாக, சுமார் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதில் மட்டுமல்லாமல், தெதுரு ஓயாவின் கீழ் பகுதியான கோபைகனே பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்த 10 இலட்சம் கோழிகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவர் விளக்கமளித்தார். இந்த அளவிலான உயிரிழப்பு, நாட்டின் முட்டை உற்பத்தி துறைக்குப் பெரும் அடியாக அமைந்துள்ளது.
இந்த சேதத்தின் விளைவாக, முட்டை உற்பத்தி 40% வரை குறைந்துள்ளதாகவும், அடுத்து வரும் நாட்களில் முட்டை விலை கணிசமாக உயரக்கூடும் என்றும் சரத் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இயற்கை பேரிடர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு மட்டுமல்ல, நுகர்வோருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Editorial Staff