சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் இரண்டாம் திருமணம்: முன்னாள் மனைவி சியாமலி தேவின் அதிர்ச்சி பதிவு
இவர்களது திருமணம், கோவை ஈசா மையத்தில் அமைந்துள்ள பைரவி கோவிலில் எளிமையான சடங்குகளுடன் நடைபெற்றது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். நடிகர் நாக சைதன்யாவிடமிருந்து 2021-இல் விவாகரத்து பெற்ற பிறகு, நீண்ட காலமாக தனிமையில் இருந்த சமந்தா, தற்போது இயக்குனர் ராஜ் நிடிமோருவை மணந்துள்ளார்.
இவர்களது திருமணம், கோவை ஈசா மையத்தில் அமைந்துள்ள பைரவி கோவிலில் எளிமையான சடங்குகளுடன் நடைபெற்றது.
திருமணத்தின் புகைப்படங்களை சமந்தா தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குனர் ராஜ் நிடிமோருவின் முன்னாள் மனைவி சியாமலி தே, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கையற்ற செயல்களைச் செய்கிறார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, பரவலான விவாதத்தை உருவாக்கியுள்ளது. இது சமந்தா–ராஜ் திருமணத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து பலரும் ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர்.
சமந்தா–ராஜ் ஜோடி சமீபத்தில் பல பொது நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டிருந்தனர். இந்த உறவு குறித்து அவர்கள் வெளிப்படையாக பேசாவிட்டாலும், இப்போது திருமணம் மூலம் அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
Editorial Staff