பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை ; 6 ஓட்டங்களால் மாபெரும் வெற்றி

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 6 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை ; 6 ஓட்டங்களால் மாபெரும் வெற்றி

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 6 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. 

பின்னர் 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தெரிவான நிலையில், இலங்கை அணி இந்த வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இந்த போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.