வீட்டிலுள்ள அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்தலாமா? – சரும நோய் அபாயம் குறித்த எச்சரிக்கை!
வீட்டில் உள்ள அனைவரும் ஒரே குளியல் சோப்பைப் பயன்படுத்துவது பொதுவான பழக்கமாக இருந்தாலும், இது சரும ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்பது தற்போதைய மருத்துவ ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது.
வீட்டில் உள்ள அனைவரும் ஒரே குளியல் சோப்பைப் பயன்படுத்துவது பொதுவான பழக்கமாக இருந்தாலும், இது சரும ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்பது தற்போதைய மருத்துவ ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது.
பழைய காலங்களில் ஒரு சோப்புக் கட்டியை குடும்பம் முழுவதும் பகிர்ந்து கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், பலரும் தனிப்பட்ட குளியல் சோப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் – இது மிகவும் நல்ல பழக்கம்.
ஏனெனில், சோப்புக் கட்டி ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்திருக்கும். இதனால், பாக்டீரியா, வைரஸ், பஞ்சஸ் (பூஞ்சை) போன்ற நுண்கிருமிகள் சோப்பின் மேற்பரப்பில் வளர்ந்து, நீண்ட நேரம் தங்கியிருக்கும். ஒருவர் உபயோகித்த சோப்பை இன்னொருவர் உபயோகிக்கும்போது, இந்த நுண்கிருமிகள் எளிதாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவக்கூடும்.
இது குறிப்பாக சரும நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. எக்சிமா, பூஞ்சை தொற்று, தோல் புண்கள், வெடிப்புகள் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களிடமிருந்து, ஆரோக்கியமான நபர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உண்டு. குறிப்பாக, எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் அல்லது தோலில் சிறிய காயங்கள் உள்ளவர்கள் இதற்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள்.
எனவே, ஒரே சோப்பை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை என்றால், அதை ஒவ்வொரு முறையும் நன்கு கழுவி, முழுமையாக உலர வைத்தல் அவசியம். இது கணவன்–மனைவி உறவிலும் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை.
இந்தப் பிரச்சினையை முற்றிலும் தவிர்க்க திரவ சோப் (Liquid Soap) சிறந்த தீர்வாகும். இது பாட்டிலில் கிடைக்கிறது; நேரடி தொடுதல் இல்லாததால் கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
குளியல் என்பது வெறுமனே உடலை கழுவுவது மட்டுமல்ல – அழுக்கு, எண்ணெய், வியர்வை, பாக்டீரியா, வைரஸ்கள் ஆகியவற்றை அகற்றி, தோலை புத்துணர்ச்சியடையச் செய்வதாகும். எனவே, குளியலின் தரம், பயன்படுத்தும் சோப்பின் தரத்தையும் சார்ந்தது.
எளிய கவனமும், சிறிது அக்கறையும், தரமான குளியல் சோப்புடன் சேரும்போது – குளியல் ஒரு ஆனந்தமான, ஆரோக்கியமான அனுபவமாக மாறும்.
Editorial Staff