விராட் கோலி: 11வது முறையாக தொடர்ச்சியாக 2 ஒருநாள் போட்டிகளில் சதம் – உலக சாதனை படைத்த இந்திய நட்சத்திரம்!
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி அற்புதமான 102 ஓட்டங்கள் எடுத்து, உலக அளவில் பல சாதனைகளை உடைத்துள்ளார்.
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி அற்புதமான 102 ஓட்டங்கள் எடுத்து, உலக அளவில் பல சாதனைகளை உடைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ஓட்டங்கள் குவித்தது. இதில் விராட் கோலி (102) மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் (105) ஆகியோர் சதமடித்து அதிரடி காட்டினர்.
கோலி, 93 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 102 ஓட்டங்களை எடுத்தார். இந்த சதம் மூலம் அவர் பல புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார்:
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அனைத்து வடிவ போட்டிகளிலும் (டெஸ்ட், ODI, T20I) 26 முறை 50+ ஓட்டங்கள் எடுத்து, சச்சின் டெண்டுல்கரின் (25) சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார்.
ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 15 முறை 50+ ஓட்டங்கள் எடுத்து, ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்கக்காரவுடன் சமன் செய்தார்.
11வது முறையாக, தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் போட்டிகளில் சதமடித்து, உலக அளவில் இதுவரை யாராலும் நெருங்க முடியாத சாதனையை படைத்தார்.
– ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் பாபர் அசாம் – 6 முறை
– ரோஹித் சர்மா, குமார் சங்கக்காரா, சயீத் அன்வர் – 5 முறை
மேலும், 34 வெவ்வேறு மைதானங்களில் ஒருநாள் போட்டிகளில் சதமடித்து, சச்சின் டெண்டுல்கருடன் சமன் செய்தார் – இதுவும் ஒரு முக்கியமான சாதனையாகும்.
விராட் கோலி தனது நிலைத்தன்மை, நுட்பமான ஆட்டம் மற்றும் தொடர்ச்சியான சாதனைகள் மூலம், உலக கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை உறுதிப்படுத்தி வருகிறார்.
Editorial Staff