இம்ரான் கான் நலமுடன் உள்ளார் – சிறையில் இம்ரான் கானை சந்தித்த சகோதரி தகவல்

கடந்த ஓராண்டுகாலமாக அவரை உறவினர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால், அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு இறந்துவிட்டார் என்ற யூகங்கள் பரவின.

இம்ரான் கான் நலமுடன் உள்ளார் –  சிறையில் இம்ரான் கானை சந்தித்த  சகோதரி தகவல்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், முன்னணி கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், 2023ஆம் ஆண்டு ‘தோஷ்கானா’ (Toshakhana) வழக்கில் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராகவும், பின்னர் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் (PTI) கட்சியைத் தொடங்கி நாட்டின் பிரதமராகவும் பணியாற்றியவர்.

கடந்த ஓராண்டுகாலமாக அவரை உறவினர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால், அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு இறந்துவிட்டார் என்ற யூகங்கள் பரவின.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 2, 2025) இம்ரான் கானின் சகோதரி உஸ்மாவுக்கு அவரை சந்திக்க அரசு அனுமதி வழங்கியது. சிறையில் இம்ரான் கானை சந்தித்த பின்னர் உஸ்மா, பத்திரிகையாளர்களை சந்தித்து முக்கிய தகவல்களை வெளியிட்டார்.

அவர் கூறுகையில்: “இம்ரான் கான் உடல்நலமாக உள்ளார். ஆனால், தனியறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருப்பதால், அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். சிறை வளாகத்தில் நடமாடுவதற்கும், புதிய காற்றை உள்விடுவதற்கும் குறைந்த நேரமே வழங்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள், அவருக்கு மனிதாபிமான விடுதலை அல்லது நியாயமான சிறை நடவடிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.