யாழில் பட்டப்பகலில் படுகொலை: ஆறு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் – டிசம்பர் 15 வரை உத்தரவு
தடுப்பு காவல் விசாரணை முடிவுற்ற நிலையில், ஆறு கைதிகளும் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 15 வரை விளக்கமறியல் (Remand) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (டிசம்பர் 3) முற்படுத்தப்பட்ட விசாரணையின் போது மேலதிக நீதிவானால் வழங்கப்பட்டது.
விசாரணையின் போது, கொலை நடந்த நேரத்தில் தாக்குதலாளிகளை ஆதரிக்கும் வகையில் செயல்பட்ட சந்தேக நபர்களை பின்தொடர்ந்து சென்ற கார் ஒன்று, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு (CID) பொலிஸாரால் ஏழாலை பகுதியில் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு காவல் விசாரணை முடிவுற்ற நிலையில், ஆறு கைதிகளும் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கவாறு, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், திருநெல்வேலி சந்தியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பான விசாரணையில் இந்த ஆறு பேரையும் கைது செய்திருந்தனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொலை சம்பவத்தின் முழு உண்மைகளும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Editorial Staff