மூன்றாவது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை

பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் தனது மூன்றாவது கணவரையும் விவாகரத்து செய்துள்ளார். 


மூன்றாவது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை

பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் தனது மூன்றாவது கணவரையும் விவாகரத்து செய்துள்ளார். 
 
மோகன்லாலின் "தன்மந்த்ரா" படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்த மீரா, தமிழில் "உன்னை சரணடைந்தேன்", "அடங்க மறு", "ஜெர்ரி", "அறிவுமணி", "கத்திக்கப்பல்", "ஆட்ட நாயகன்" உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார். 
 
2005இல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் அவரை விவாகரத்து செய்தார். 
 
தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார்.  இவர்கள் இருவரினதும் இல்லற வாழ்க்கையில், அரிஹரா என்ற மகனை மீரா வாசுதேவன் பெற்றெடுத்தார். 

ஆனால் அந்த உறவும் நீடிக்காமல் அவரை விவாகரத்து செய்த மீரா, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மூன்றாவது கணவர் விபினையும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க