உச்சம் தொட்ட தங்கத்தின் விலை.. இலங்கையில் விற்பனை 60% சரிவு !

Published on: 10 Oct 2025, 03:47 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்ததை அடுத்து, உள்ளூர் சந்தையிலும் தங்கம் அதி உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

உச்சம் தொட்ட தங்கத்தின் விலை.. இலங்கையில் விற்பனை 60% சரிவு !

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்ததை அடுத்து, உள்ளூர் சந்தையிலும் தங்கம் அதி உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் மட்டும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 15,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த விலை உயர்வால், தங்க விற்பனை சுமார் 60% குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு வாரத்திற்கு முன்பு 24 காரட் தங்கத்தின் விலை 303,000 ரூபாயாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

நேற்று (09) காலை 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் தங்கத்தின் விலை 328,000 ரூபாயாக இருந்தது என்றும், ஆனால் நேற்று (09) பிற்பகல் 330,000 ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தங்க பிஸ்கட்களை இறக்குமதி செய்யும்போது 28% வரி செலுத்த வேண்டும் என்றும், மற்ற வரிகளுடன் சேர்த்து 50% அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக நகை விற்பனையில் ஈடுபடும் யாரும் தங்க பிஸ்கட்களை இறக்குமதி செய்ய மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW