மன்னர் கொடுத்த விருந்தின்போது இளவரசர் ஹரியை சீண்டிய ட்ரம்ப்
பிரித்தானியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மன்னர் சார்லஸ் விண்ட்சர் மாளிகையில் விருந்தளித்தார்.

பிரித்தானியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மன்னர் சார்லஸ் விண்ட்சர் மாளிகையில் விருந்தளித்தார்.
விருந்தின்போது உரையாற்றிய ட்ரம்ப், மன்னரையும் இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரையும் புகழ்ந்த நிலையில், அவரது பேச்சு இளவரசர் ஹரியை லேசாக சீண்டும் வகையில் இருந்தது.
இளவரசர் வில்லியமை பாராட்டிப் பேசும்போது, மன்னர் ஒரு அற்புதமான மகனை வளர்த்துள்ளார் என குறிப்பிட்ட ட்ரம்ப், மன்னருடைய இன்னொரு மகனான ஹரியைக் குறித்து அவர் எதுவும் பேசவில்லை.
வேண்டுமென்றே அவர் ஹரியைப் புறக்கணித்ததுபோல் தோன்றியதுடன், மன்னர் சார்லஸ் ஏழைகளுக்கு உதவுபவர், விவசாயிகள் மீது அக்கறை கொண்டவர் என்று கூறிய ட்ரம்ப், காயமடைந்த ராணுவத்தினர் மீது அவரைப்போல் அக்கறை செலுத்துபவர் வேறு யாரும் கிடையாது என்றும் கூறினார்.
இளவரசர் ஹரி காயமடைந்த ராணுவ வீரர்களுக்காகவே இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகள் என்னும் போட்டிகளை உருவாக்கி நடத்திவருகிறார். ஆனால், ட்ரம்ப் ஹரியை சீண்டுவதற்காகவே வேண்டுமென்றே அது குறித்து பேசாமல் விட்டதாகவும், இளவரசர் வில்லியமை மட்டும் புகழ்ந்துவிட்டு ஹரியை புறக்கணித்ததாகவும் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.