திருகோணமலை: மின்சாரம் தாக்கி 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழப்பு

அப்பகுதியில் ஓர் உள்ளூர் விவசாயி, தனது வீட்டிலிருந்து தோட்டத்திற்கு மின்சாரத்தை இணைத்திருந்தார். இன்று மறந்து மின்சாரத்தை துண்டிக்காமல் விட்டிருந்தார்.

திருகோணமலை: மின்சாரம் தாக்கி 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சல்லிமுனை பகுதியில் இன்று (ஜனவரி 10, 2026) மின்சாரம் தாக்கியதில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இறந்த சிறுவன், குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 9ஆம் வகுப்பு படித்து வந்தவராவார். சம்பவம் நடந்த போது, அவர் வழக்கம் போல் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்பகுதியில் ஓர் உள்ளூர் விவசாயி, தனது வீட்டிலிருந்து தோட்டத்திற்கு மின்சாரத்தை இணைத்திருந்தார். வழமைபோல் காலையில் மின்சாரத்தை இயக்குவது வழக்கமாக இருந்தாலும், இன்று அதனை மறந்து மின்சாரத்தை துண்டிக்காமல் விட்டிருந்தார். இதனால், சிறுவன் மின்கம்பியில் சிக்கி தூக்கி எறியப்பட்டார்.

உடனடியாக குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரண சம்பவம் தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.