பெண்களே உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் இருக்கா அப்ப உஷாரா இருந்துக்கோங்க! – கவனிக்க வேண்டிய எச்சரிக்கை
இந்த மன அழுத்தம் நீண்ட காலம் கவனிக்கப்படாமல் விடப்பட்டால், அது தீவிரமடைந்து மனதில் எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும். ஒருகட்டத்தில் அது தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஒருவரின் வாழ்க்கையில் மன ஆரோக்கியம் என்பது உடல் ஆரோக்கியத்துக்கு இணையான முக்கியத்துவம் கொண்டது. மனிதனின் மனநிலை, அவனுடைய உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் நடத்தையை நேரடியாக பாதிக்கக்கூடியது. மனம் பாதிக்கப்படும்போது, அது நாளந்தோறும் செய்யும் செயல்களிலும், உறவுகளிலும், வேலை திறனிலும் மாற்றங்களை உருவாக்கும்.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் அலுவலகப் பணிச்சுமை, இலக்குகளை அடைய வேண்டிய அழுத்தம், குடும்ப பொறுப்புகள், பொருளாதார சிக்கல்கள் போன்ற காரணங்களால் பலர் மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு தாங்கள் மன அழுத்தத்தில் இருப்பதே தெரியாமல், அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த மன அழுத்தம் நீண்ட காலம் கவனிக்கப்படாமல் விடப்பட்டால், அது தீவிரமடைந்து மனதில் எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும். ஒருகட்டத்தில் அது தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு டாக்டர் ஷர்மிகா சமூக வலைதளத்தில் தீவிரமான மன அழுத்தத்தில் இருக்கும் போது உடலில் தோன்றக்கூடிய சில முக்கிய அறிகுறிகளை பகிர்ந்துள்ளார். மனித வாழ்க்கையில் சிரமங்கள் வருவது இயல்பானதே என்றாலும், மன அழுத்தமும் மன இறுக்கமும் அதிகமாக இருக்கும் போது, அது நமக்குத் தெரியாமலேயே உடலின் பல பகுதிகளில் பாதிப்புகளை உருவாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று கண்ணீர் வருவது, அமைதியாக இருக்கும்போது கையின் விரல்கள் தானாக அசைவது அல்லது நடுங்குவது, கண்கள் அடிக்கடி துடிப்பது போன்றவை மன அழுத்தத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். அதேபோல், உட்கார்ந்திருக்கும் நிலையிலேயே சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் கசிவு ஏற்படுவதும், உடல் வலியுடன் கை மூட்டுகளில் வலியும் நீண்ட கால மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்பதே முக்கியமானது. மன அழுத்தத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்ய வேண்டும், பிடித்த செயல்களில் ஈடுபட வேண்டும், தேவையற்ற பழக்கங்கள் அல்லது அடிமைத்தனங்களில் இருந்து விலக வேண்டும் என்றும் டாக்டர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். மேலும், மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்ற வார்த்தைகளையே தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்ப்பதும் மனநிலையை சிறிதளவு நேர்மறையாக மாற்ற உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, இந்த அறிகுறிகள் உங்களிடமோ அல்லது உங்களுக்குச் சுற்றியுள்ளவர்களிடமோ தென்பட்டால், அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனே கவனம் செலுத்தி, நிபுணர்களின் உதவியுடன் மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
Editorial Staff