பாபா வங்கா எச்சரிக்கை: 2026இல் தங்கம் விலை 40% வரை உயரலாம்!

பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி அல்லது சர்வதேச வங்கி மந்தநிலை ஏற்படக்கூடும் என கணித்துள்ளார். அதனால், அவர் தங்கத்தின் விலை அந்த ஆண்டு உச்சம் தொடுக்கும் என எச்சரித்துள்ளார்.

பாபா வங்கா எச்சரிக்கை: 2026இல் தங்கம் விலை 40% வரை உயரலாம்!

எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்ததற்காக உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா. இளவரசி டயானாவின் மரணம், 9/11 தாக்குதல்கள், சீனாவின் உலக அரங்க எழுச்சி போன்ற பல முக்கிய நிகழ்வுகளை முன்னறிவிப்பு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், 2026 ஆம் ஆண்டு குறித்தும் பாபா வங்கா சில அதிர்ச்சி கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார் — அதில் மிகவும் கவனம் பெறுவது தங்கம் தொடர்பான எச்சரிக்கை.

பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி அல்லது சர்வதேச வங்கி மந்தநிலை ஏற்படக்கூடும் என கணித்துள்ளார். இத்தகைய பொருளாதாரச் சோக சமயங்களில் பொதுவாக மக்கள் தங்கத்தை நோக்கி ஓடுவது வழக்கம். அதனால், அவர் தங்கத்தின் விலை அந்த ஆண்டு உச்சம் தொடுக்கும் என எச்சரித்துள்ளார்.

இந்தியாவில், 2024 அக்டோபர் 17ஆம் தேதி 24 காரட் தங்கம் ஒரு கிராம் ₹13,277 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன்பின் மெல்ல விலை குறைந்து, தற்போது ₹12,300 சுற்றி நிலைத்துள்ளது. இருப்பினும், பொருளாதார வல்லுநர்கள் இந்த விலை வீழ்ச்சியை ஒரு வாய்ப்பாகவே கருதுகின்றனர்.

உலக வர்த்தகப் பதற்றங்கள், அதிகரிக்கும் பணவீக்கம், வங்கித் துறையின் நிலையின்மை ஆகியவை தங்க விலையை மீண்டும் உயர வைக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த பெரிய மந்தநிலைகளின்போது தங்க விலை 50% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாபா வங்காவின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, சில பொருளாதார நிபுணர்கள் 2026 தீபாவளிக்குள் தங்க விலை 25% முதல் 40% வரை உயர்ந்து, ஒரு கிராம் ₹16,000 முதல் ₹18,000 வரை செல்லும் என மதிப்பிடுகின்றனர்.

இந்தச் சூழலில், முதலீட்டாளர்களுக்கு ஒரு தெளிவான செய்தி: நிச்சயமற்ற காலங்களில் தங்கம் தான் மிகவும் பாதுகாப்பான முதலீடாக நிற்கிறது. பிட்காயின், பங்குச் சந்தை போன்ற மற்ற முதலீடுகள் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், பெரும் நெருக்கடிகளின்போது “தங்கம் தான் கிங்” என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.

எனினும், இந்தக் கணிப்புகளை மட்டும் சார்ந்து முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பொருளாதாரத் தரவுகள், பணவீக்க விகிதம், புவிசார் அரசியல் நிலைமைகள் போன்றவற்றையும் கவனத்தில் கொண்டு, உங்கள் பொருளாதார ஆலோசகரின் உதவியுடன் முடிவு எடுப்பதே புத்திசாலித்தனமான அணுகுமுறை.

குறிப்பு: இந்தக் கட்டுரை தகவல் மற்றும் ஆர்வத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதை முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ளக் கூடாது.