குட்டி கவுனில் கண்ணைக் கவரும் லுக்! ரசிகர்களை மயக்கும் ரேஷ்மா பசுப்புலேட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி, தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோக்களால் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறார்.

குட்டி கவுனில் கண்ணைக் கவரும் லுக்! ரசிகர்களை மயக்கும் ரேஷ்மா பசுப்புலேட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி, தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோக்களால் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறார். குட்டி கவுன் அணிந்து எடுத்துள்ள இந்த புதிய புகைப்படங்கள், பார்க்க பார்க்க ரசிக்கத் தோன்றும் வகையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுப்புலேட்டியின் மகளாக பிறந்த ரேஷ்மா, ஆரம்பத்தில் தெலுங்கு திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். ‘மசாலா’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான அவர், பின்னர் தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கணவரை பிரிந்து, முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்திய ரேஷ்மா, அதன் பிறகு சின்னத்திரையில் தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார். தற்போது பாக்கியலட்சுமி மற்றும் கார்த்திகை தீபம் ஆகிய பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள குட்டி கவுன் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, “அழகும் எலெகன்ஸும் ஒரே ஃப்ரேமில்” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.