இந்த 3 அறிகுறிகள் தெரிந்தால் கவனமா இருங்க... இல்லன்னா சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்!

உயர் இரத்த அழுத்தம் உலகம் முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு அமைதியான கொலைகாரன். பலர் தங்களுக்கு இந்த நிலை இருப்பதை ஆண்டுகள் அறியாமலே வாழ்கின்றனர்.

இந்த 3 அறிகுறிகள் தெரிந்தால் கவனமா இருங்க... இல்லன்னா சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்!

உயர் இரத்த அழுத்தம் உலகம் முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு அமைதியான கொலைகாரன். பலர் தங்களுக்கு இந்த நிலை இருப்பதை ஆண்டுகள் அறியாமலே வாழ்கின்றனர். ஏனெனில், இதன் அறிகுறிகள் பெரும்பாலும் தினசரி சோர்வு, தூக்கமின்மை அல்லது மன அழுத்தம் போன்ற சாதாரண பிரச்சினைகளாக தோன்றுகின்றன. ஆனால், இந்த அறிகுறிகளைப் புறக்கணித்தால் பின்னர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயிருக்கே ஆபத்தான நிலைகள் உருவாகலாம்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு பல காரணிகள் உள்ளன – ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சி இன்மை, நீண்ட நாள் மன அழுத்தம், அதிக மது பழக்கம், தூக்கமின்மை, பரம்பரை வரலாறு போன்றவை அவற்றில் முக்கியமானவை. எனவே, ஆரம்ப கட்டத்திலேயே இதன் அறிகுறிகளை அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.

முதலாவதாக, காலை நேர தலைவலி. குறிப்பாக காலையில் எழுந்தவுடன் தலையின் பின்புறத்தில் ஏற்படும் வலி, இரத்த அழுத்தம் அதிகரித்து மண்டை ஓட்டில் அழுத்தத்தை உருவாக்குவதன் அறிகுறியாக இருக்கலாம். தூக்கத்தின் போதும் அதிகாலையிலும் இரத்த அழுத்தம் உச்சத்தை அடைவது இயல்பு.

இரண்டாவதாக, பார்வையில் ஏற்படும் மங்கல் அல்லது இரட்டைப் பார்வை. உயர் இரத்த அழுத்தம் கண்களின் சிறிய இரத்த நாளங்களை பாதிக்கிறது. இதனால் “உயர் இரத்த அழுத்த ரெட்டினோபதி” என்ற நிலை ஏற்படுகிறது. இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் பலர் பார்வை மங்கலை கணினி பயன்பாட்டின் விளைவாக எண்ணுகின்றனர். ஆனால், இது இரத்த அழுத்தத்தின் எச்சரிக்கையாகவும் இருக்கக்கூடும்.

மூன்றாவதாக, காரணமில்லாத உடல் சோர்வு அல்லது மந்தமான மனநிலை. போதுமான தூக்கம் எடுத்த பின்னரும் தொடர்ந்து சோர்வாக உணர்வது, இதயம் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் சரிவர செல்லாமல் இருப்பதைக் குறிக்கிறது. இந்த மூன்று அறிகுறிகளில் எதாவது ஒன்று தொடர்ந்து தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி இரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.