புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி: வாங்க முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்கள்
தங்கம், வெள்ளி விலைகளின் இந்த தொடர் உயர்வு, திருமண மற்றும் சேமிப்பு தேவைகளுக்காக வாங்க திட்டமிட்டிருந்த நடுத்தர மக்களை பெரும் சிரமத்தில் தள்ளியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், நடுத்தர மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சிறிதாவது விலை குறையும் என்ற நம்பிக்கையையும் முறியடித்து, தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது. ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600-க்கு விற்பனையானது. அதேபோல், ஒரு கிராமின் விலை ரூ.170 உயர்ந்து ரூ.13,450-ஆக பதிவானது. கடந்தாண்டின் இறுதியில் இருந்த உயர்வு போக்கே இந்த ஆண்டின் தொடக்கத்திலும் தொடர்வதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,610-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,880-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலையும் உயர்வைத் தொடர்கிறது. ஒரு கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.330-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,30,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கம், வெள்ளி விலைகளின் இந்த தொடர் உயர்வு, திருமண மற்றும் சேமிப்பு தேவைகளுக்காக வாங்க திட்டமிட்டிருந்த நடுத்தர மக்களை பெரும் சிரமத்தில் தள்ளியுள்ளது.
Editorial Staff