மாதவிடாய் காலத்தில் உடலுறவு: அறிவியல் சொல்வது என்ன? – டாக்டர் விளக்கம்

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதில் அறிவியல் ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரே எச்சரிக்கை என்னவென்றால், பாலியல் நோய் உள்ள பெண்ணுடன் பாதுகாப்பு இல்லாமல் உறவு கொண்டால் அந்நோய் ஆணுக்கும் பரவக்கூடும்.


மாதவிடாய் காலத்தில் உடலுறவு: அறிவியல் சொல்வது என்ன? – டாக்டர் விளக்கம்

"மாதவிடாய் வந்தால் ஜன்னி வந்துடும்!" என்ற பயம் இன்றும் பலரின் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. அறிவியல் வளர்ந்த இந்தக் காலக்கட்டத்திலும், மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி பலர் தவறான நம்பிக்கைகளையும், பயங்களையும் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ் ஒரு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், இன்றும் சில குடும்பங்களில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையலறைக்குள் செல்லக்கூடாது, பூஜையறைக்குள் அனுமதியில்லை, அல்லது தனியறையில் தனிமையில் இருக்க வேண்டும் என்ற மரபுகள் நிலவுகின்றன. இது மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் படித்த இந்தியர்கள்கூட இந்த நம்பிக்கைகளைத் தொடர்கின்றனர். அமெரிக்காவில் ஒரு ஆண், மாதவிடாயில் இருந்த தன் மனைவியை இரவு முழுவதும் பால்கனியில் உட்கார வைத்த சம்பவம் கூட உண்டு என்று அதிர்ச்சியூட்டுகிறார்.

டாக்டர் காமராஜ் ஒரு அதிர்ச்சியான நிகழ்வையும் பகிர்ந்துள்ளார்: எம்.டெக் படித்து ஐ.டி. துறையில் பணிபுரியும் ஒரு தம்பதி, குழந்தையின்மை சிகிச்சைக்காக அவரிடம் வந்திருந்தனர். அப்போது செக்ஸ் தெரபி அளிக்கப்பட்டது. ஆனால், மனைவிக்கு மாதவிடாய் வந்தால் இருவரும் சிகிச்சைக்கு வர மறுத்தனர். அவர்களிடம், "மாதவிடாய் ரத்தம் அசுத்தம் அல்ல; அதில் ஸ்டெம் செல்கள் இருக்கின்றன. ஈரானில் கூட அதை மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்துகின்றனர்" என அறிவியல் அடிப்படையில் விளக்கம் அளித்தாலும், அவர்கள் வீட்டுப் பெரியவர்கள் கூறிய "ஜன்னி பயம்" மட்டுமே பலமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

இன்றும், "பீரியட்ஸ் அப்போ செக்ஸ் வைச்சுக்கிட்டா ஜன்னி வந்துடுமா டாக்டர்?" என்ற கேள்வி அவரை வாரம் ஒரு முறையாவது சந்திக்கிறது. அதற்கு அவர் திட்டவட்டமாக விடை சொல்கிறார்: மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதில் அறிவியல் ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரே எச்சரிக்கை என்னவென்றால், பாலியல் நோய் உள்ள பெண்ணுடன் பாதுகாப்பு இல்லாமல் உறவு கொண்டால் அந்நோய் ஆணுக்கும் பரவக்கூடும். அதைத் தவிர, மாதவிடாய் காலத்தில் செக்ஸ் பாதுகாப்பானது என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.

மாதவிடாய் என்பது இயற்கையான உடல் செயல்பாடு; அதை "அசுத்தம்" என்று கருதுவது தவறான நம்பிக்கை மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான பாகுபாட்டையும் ஊக்குவிக்கிறது. அறிவியல் அறிவை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புராணக் கதைகளை மக்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டிய நேரம் இது என்று டாக்டர் காமராஜ் வலியுறுத்துகிறார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க