திடீரென சரிந்த தங்கம் விலை – வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு இன்ப சர்ப்ரைஸ்!
வாரத்தின் தொடக்க நாளில் விலை குறைவு நகை பிரியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பல நகைக் கடைகளில் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டு நகை பிரியர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தங்கம் விலை, இன்று வாரத்தின் முதல் நாளில் திடீரென சரிந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
நேற்று வரை ஒரு சவரன் தங்கம் ₹1,04,800 மற்றும் ஒரு கிராம் ₹13,100 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று திடீரென ₹640 குறைந்து ₹1,04,160 என்ற விலையில் சவரன் தங்கம் விற்கப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ₹80 குறைந்து ₹13,020 ஆக உள்ளது. இது கடந்த பல வாரங்களில் முதல் முறையாக பதிவாகும் குறைவு.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ₹57,200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்னும் ஆண்டு முடியாமலே தங்க விலை ஓர் இலட்சத்தை எளிதாகக் கடந்து, நேற்று ₹1,04,800 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த ஏற்றம் பலரையும் “இனி கனவில் தான் தங்கம் வாங்க முடியுமோ?” என்று கவலைப்பட வைத்திருந்தது.
இந்த நிலையில், இன்று வாரத்தின் தொடக்க நாளில் விலை குறைவு நகை பிரியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பல நகைக் கடைகளில் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வெள்ளி விலையிலும் சிறிய சரிவு பதிவாகியுள்ளது. கடந்த இரு மாதங்களில் ₹160 இருந்து ₹285 வரை உயர்ந்த வெள்ளி, இன்று ₹4 குறைந்து ₹281-ஆக சென்னையில் விற்பனையாகிறது. இது நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கம், வெள்ளி இரண்டிலும் ஒரே நாளில் பதிவாகும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சரிவு நிலையானதாக இருக்குமா, அல்லது மீண்டும் ஏற்றம் தொடருமா என்பது பொருளாதார சூழல், அமெரிக்க டாலர் மதிப்பு, உலக முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு தேவை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். இருப்பினும், இன்றைய இந்த இன்ப அதிர்ச்சி, தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு ஒரு சாதகமான சமிக்ஞையாக அமைந்துள்ளது.
Editorial Staff