Bigg Boss Tamil Season 9 Finale: வைல்டு கார்டில் நுழைந்து டைட்டிலை வென்ற திவ்யா… பிக்பாஸ் வரலாற்றில் 2-வது முறை!
இதற்கு முன்பு பிக் பாஸ் சீசன் 7-ல் வைல்ட் கார்டாக நுழைந்து கோப்பையை வென்றவர் Archana. அவரைத் தொடர்ந்து தற்போது திவ்யா கணேசன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
Bigg Boss Tamil நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 9 சீசன்களை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். முந்தைய சீசன்களைப் போல திரைத்துறை பிரபலங்கள் அதிகம் இல்லாமல், சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான பலரும் இதில் கலந்து கொண்டனர். இதனால் ஆரம்பத்தில் “இந்த சீசனில் கன்டென்ட் இருக்காது” என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், VJ Parvathy தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்தியதால் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியது.
இந்த சீசனின் மற்றொரு முக்கிய திருப்பமாக, வழக்கமாக 40 அல்லது 50 நாட்களுக்கு பிறகு வீட்டிற்குள் நுழையும் வைல்டு கார்டு போட்டியாளர்கள், 30 நாட்களே நிறைவடையாத நிலையில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் Prajin, Sandra, Divya Ganeshan, Amit Bhargav ஆகியோர் வைல்டு கார்டு மூலம் போட்டியில் இணைந்தனர். இவர்களின் வருகைக்கு பிறகு பிக்பாஸ் 9 மேலும் பரபரப்பாக மாறியது.
பிக்பாஸ் 9-இல் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத மிகப் பெரிய ட்விஸ்ட் என்றால், Parvathy மற்றும் Kamrudheen இருவரும் ஒரே நேரத்தில் ரெட் கார்டு பெற்று வெளியேறியது தான். டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கின் போது, காரில் இருந்து சாண்ட்ராவை எட்டி உதைத்து தள்ளிய விவகாரத்தில் இருவரும் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி ரெட் கார்டு வழங்கப்பட்டது. பிக்பாஸ் வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்கள் ரெட் கார்டு பெற்றது இதுவே முதன்முறையாக அமைந்தது. குறிப்பாக பார்வதியே டைட்டிலை வெல்வார் என்ற கணிப்புகள் இருந்த நிலையில், இந்த வெளியேற்றம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து 100 நாட்களை கடந்த நிலையில் திவ்யா, அரோரா, சாண்ட்ரா, கானா வினோத், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் போட்டியில் தொடர்ந்தனர். இதில் Gaana Vinoth ரூ.18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். தொடர்ந்து குறைந்த வாக்குகளைப் பெற்றதாக சாண்ட்ரா எலிமினேட் செய்யப்பட்டார். இறுதியாக ஃபினாலே ரேஸில் திவ்யா, அரோரா, விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன் ஆகிய நால்வர் இடம் பெற்றனர்.
மக்கள் வாக்குகளின் அடிப்படையில் அதிக ஆதரவை பெற்ற திவ்யா கணேசன், பிக்பாஸ் சீசன் 9 டைட்டிலை கைப்பற்றினார். இதன் மூலம் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டாக நுழைந்து கோப்பையை வென்ற இரண்டாவது போட்டியாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இரண்டாவது இடத்தை Sabarinathan பிடித்தார். மூன்றாவது இடத்தை Vickles Vikram கைப்பற்றினார்.
Editorial Staff