இலங்கை இளைஞன் மீது லண்டனில் 7 பாரதூர குற்றச்சாட்டுகள்; மறுத்து நீதிமன்றத்தில் ஆஜர்

Published on: 13 Dec 2025, 06:14 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

அரசாங்கத்தால் புகலிட கோருபவர்களை தங்க வைக்க பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர வசதியுடைய St Giles Hotel விருந்தகத்தில் அவர் வசித்து வந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை இளைஞன் மீது லண்டனில் 7 பாரதூர குற்றச்சாட்டுகள்; மறுத்து நீதிமன்றத்தில் ஆஜர்

பிரித்தானியாவில் புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் கடந்த நவம்பர் 1ஆம் திகதி மேற்கு லண்டனின் ஃபெல்தாம் பகுதியில் இடம்பெற்றதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 வயதான யாஷின் ஹிமாசார, Isleworth Crown Court நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையாகினார். சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்த அவர், கடத்தல், துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளிலும் தாம் குற்றமற்றவர் என தெரிவித்தார்.

அரசாங்கத்தால் புகலிட கோருபவர்களை தங்க வைக்க பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர வசதியுடைய St Giles Hotel விருந்தகத்தில் அவர் வசித்து வந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஹிமாசாரவை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேலதிக விசாரணைகள் 2026 ஏப்ரல் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW