John Cena ஓய்வு: கடைசி போட்டியில் என்ன நடந்தது? ரசிகர்கள் கண்ணீருடன் பிரியாவிடை

WWE தொடரில் “முடிசூடா மன்னன்” என ரசிகர்களால் போற்றப்பட்ட ஜான் சீனா, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். 

John Cena ஓய்வு: கடைசி போட்டியில் என்ன நடந்தது? ரசிகர்கள் கண்ணீருடன் பிரியாவிடை

பிரபல மல்யுத்த வீரர் John Cena தனது கடைசி போட்டியில் களமிறங்கி WWE வளையத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.  WWE தொடரில் “முடிசூடா மன்னன்” என ரசிகர்களால் போற்றப்பட்ட ஜான் சீனா, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். 

WWE வரலாற்றில் 17 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளதுடன், யு.எஸ். சாம்பியன் பட்டத்தை ஐந்து முறையும், இன்டர் கான்டினென்டல் பட்டத்தை ஒருமுறையும், டாக் டீம் பட்டத்தை நான்கு முறையும், ராயல் ரம்பிள் தொடரை இருமுறையும் கைப்பற்றியுள்ளார்.

தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்ட 726 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜான் சீனா, WWE-யின் மாதாந்திர PLE நிகழ்வுகளில் 100 போட்டிகளில் வெற்றி பெற்று The Undertakerக்கு அடுத்ததாக அதிக PLE வெற்றிகள் பெற்ற வீரராகவும் திகழ்கிறார். 2002 ஜூன் 27-ஆம் தேதி WWE வளையத்தில் அறிமுகமான அவர், தனது இறுதி போட்டியாக Saturday Night Main Event தொடரில் வாஷிங்டனில் களமிறங்கினார். சுமார் 19,000 ரசிகர்கள் அரங்கில் திரண்டு “Thank You Cena” என முழக்கமிட்டு உணர்ச்சிப்பூர்வமாக பிரியாவிடை அளித்தனர்.

இறுதி ஆட்டத்தில் ஜான் சீனா, Guntherஐ எதிர்கொண்டார். வழக்கமான ஆக்ரோஷமும் அனுபவமும் வெளிப்பட்டாலும், முடிவில் கண்டர் தனது சிறப்பு சப்மிஷன் மூவ் மூலம் ஜான் சீனாவை ‘டாப் அவுட்’ செய்ய வைத்தார். இதன் மூலம் ஜான் சீனா தனது கடைசி போட்டியில் தோல்வியை தழுவினார்; இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

போட்டி முடிவில் ஜான் சீனாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் CM Punk மற்றும் Cody Rhodes தங்களின் சாம்பியன் பெல்ட்களை வழங்கி வழியனுப்பினர்.

 பல சக வீரர்களும் நேரில் வந்து மரியாதை செலுத்த, ஜான் சீனா கண்ணீர் மல்க ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வளையத்திலிருந்து விடைபெற்றார்.