வயதான தோற்றத்தை தடுக்க வேண்டுமா? இந்த 3 வைட்டமின்கள் அவசியம்!

சிலர் 40 வயதிலேயே 60 வயது தோற்றத்தைக் கொண்டிருப்பது பொதுவான நிகழ்வாகிவிட்டது. இந்த முன்கூட்டிய முதுமை தோற்றத்தைத் தடுக்க உதவும் மூன்று முக்கியமான வைட்டமின்கள் உள்ளன.

வயதான தோற்றத்தை தடுக்க வேண்டுமா? இந்த 3 வைட்டமின்கள் அவசியம்!

இளமையை விரும்பாதவர் யாரும் இல்லை. பலர் 40 வயதை நெருங்கும்போதே முதுமை தோற்றத்தை அடைந்துவிடுகின்றனர். இது உடல் மட்டுமல்ல, மனதையும் சோர்வடையச் செய்யும். சிலர் 40 வயதிலேயே 60 வயது தோற்றத்தைக் கொண்டிருப்பது பொதுவான நிகழ்வாகிவிட்டது. இந்த முன்கூட்டிய முதுமை தோற்றத்தைத் தடுக்க உதவும் மூன்று முக்கியமான வைட்டமின்கள் உள்ளன – அவை எவை, எங்கே கிடைக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.

வைட்டமின் B12

இது சிகப்பு இரத்த அணுக்கள் ஆரோக்கியமாக உருவாவதற்கு அவசியம். இவை சீராக இருந்தால்தான் உடலின் அனைத்து உறுப்புகளும் சுறுசுறுப்பாக இயங்கும். B12 குறைபாடு மூச்சுத் திணறல், உடல் வலி, சோர்வு போன்ற அறிகுறிகளை உண்டாக்கி, “வயதாகிவிட்டது” என்ற உணர்வைத் தூண்டும். இதைத் தடுக்க இறைச்சி, முட்டை, பால் மற்றும் பால் பொருட்கள் போன்ற உணவுகள் உதவும்.

வைட்டமின் C

இந்த வைட்டமின் உடல் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது. முக்கியமாக, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது – இது சருமத்தை இளமையாகவும், எலும்புகளை உறுதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் C அதிகம் உள்ள உணவுகளில் ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, ஸ்ட்ராபெரி, தக்காளி, திராட்சை மற்றும் பாலக்கீரை ஆகியவை அடங்கும். இவற்றை தினசரி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

வைட்டமின் D

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் முக்கியம். இதன் குறைபாடு மூட்டு வலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். வைட்டமின் D ஐப் பெற சிறந்த வழி – காலை வெயிலில் (7 முதல் 9 மணி வரை) சிறிது நேரம் நிற்பது. உணவு வழியாக முட்டை, மீன் மற்றும் காளான்கள் ஆகியவற்றிலிருந்தும் இதைப் பெறலாம்.

இந்த மூன்று வைட்டமின்களும் சீராக உடலில் இருந்தால், மூளை செயல்பாடு, எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் தோற்றம் ஆகியவை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் நீடிக்கும். இவை தவிர, வைட்டமின் K மற்றும் ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளையும் உணவில் சேர்க்க வேண்டும். இந்த உடல்நல தகவலை மருத்துவர் ரதி தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்தார்.

(Disclaimer: இந்தத் தகவல் பொதுவான கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கங்களுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. உங்கள் ஆரோக்கியம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின், தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகவும்.)